சினிமா செய்திகள்

வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள் + "||" + Don't be careless when it comes out - Kamal Haasan urges people to be careful

வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள்

வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள்
வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

பல தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “ தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும்” என்று பதிவிட்டுள்ளார்.