மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects another 5,928 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று மேலும் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 96 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,74,172 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1.36 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 73,155 பேருக்கும், இதுவரை 47,26,022 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் பாதிப்பா? மத்திய அரசு ஆய்வு
தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் பாதிப்பா? மத்திய அரசு ஆய்வு
2. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் காவிரி நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.