மாநில செய்திகள்

நாகை: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல் + "||" + Nagai: Velankanni Cathedral will be reopened tomorrow morning - District Collector Information

நாகை: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகை: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நாட்களில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. .

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. 

இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறக்கப்பட உள்ள பேராலயத்தில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், செப். 8ம் தேதி வரை வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்களுக்கு தடை என்றும் நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்ப்பு: பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்பு
இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்க உள்ளார்.
2. பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
3. தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளது.
4. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.