தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + 1,140 COVID-19 cases in Kerala on Tuesday; 1,059 through contact

கேரளாவில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் புதிதாக 1,140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 1,059 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 158 பேருக்கு யார் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. 

கேரளாவில் இதுவரை மொத்தம் 53,653 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 22,512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 1,96,582 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். 1,466 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2. தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி; 2 பேர் சிக்கினர்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.
3. கேரளாவில் மேலும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,139 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 9,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 9,140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.