உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை + "||" + Malaysia bans Indians from entering the country due to growing number of COVID-19 infections

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோலாலம்பூர்

இந்தியாவில் கொரோனா தொற்று நோய்  அதிகரிப்பு விகிதம் காரணமாக மலேசியா அரசு நேற்று  முதல் இந்தியர்கள் மலேசியாவிற்குள்  நுழைவதற்கு தடை விதித்து உள்ளது.இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்களுக்கும் இந்த தடை  பொருந்தும்.

நீண்ட கால தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மார்ச் முதல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் "உலகம் முழுவதும் இன்னும் தீவிரமாக பரவி வருவதால், இந்த ஆண்டு இறுதி வரை தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை எடுத்து உள்ளது என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.
2. கொரோனா தொற்று நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
4. சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைக்கிறது - சீனா சீற்றம்
சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
5. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.