தேசிய செய்திகள்

மாநிலங்களுடன் ஆலோசனை மேலும் அதிக சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம் - ரெயில்வே அறிவிப்பு + "||" + Plan to run more special trains

மாநிலங்களுடன் ஆலோசனை மேலும் அதிக சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம் - ரெயில்வே அறிவிப்பு

மாநிலங்களுடன் ஆலோசனை மேலும் அதிக சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம் - ரெயில்வே அறிவிப்பு
பயணிகளின் நலன் கருதி மேலும் கூடுதல் ரெயில்களை இயக்க ரெயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் நாடு முழுவதும் வழக்கமான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சரக்கு போக்குவரத்து மற்றும் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் 230 சிறப்பு ரெயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.


இந்த நிலையில் அதிக தேவை நிலவும் பகுதிகளில் பயணிகளின் நலன் கருதி மேலும் கூடுதல் ரெயில்களை இயக்க ரெயில்வே பரிசீலித்து வருவதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் கூடுதலாக இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து அவர் எதுவும் வெளியிடவில்லை. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.