உலக செய்திகள்

இலங்கை துறைமுகத்தில் 3 ரஷிய போர்க் கப்பல்கள் காரணம் என்ன? + "||" + Three Russian Navy warships dock in Lankan port

இலங்கை துறைமுகத்தில் 3 ரஷிய போர்க் கப்பல்கள் காரணம் என்ன?

இலங்கை துறைமுகத்தில் 3 ரஷிய போர்க் கப்பல்கள் காரணம் என்ன?
இலங்கை துறைமுகத்துக்கு 3 ரஷிய போர்க் கப்பல்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை இலங்கை கடற்படை தற்போது உறுதி செய்துள்ளது.
கொழும்பு,

இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் ரஷியாவின் 3 போர்க்கப்பல்கள் வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை இலங்கை கடற்படை தற்போது உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


ரஷிய நீர்மூழ்கிக் கப்பல்களான அட்மிரல் டிரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ்புட்டோமா ஆகியவை ஹம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளன. எரிபொருள் நிரப்புவதற்காகவும் மாலுமிகள் ஓய்வு எடுப்பதற்காகவும் இந்த கப்பல்கள் வந்துள்ளன. கொரோனா நெறிமுறைகள் காரணமாக ரஷிய மாலுமிகளின் நடவடிக்கைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷியாவின் 3 போர்க் கப்பல்களும் நாளை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.