தேசிய செய்திகள்

ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப் படைக்கு முதல் முறையாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம் + "||" + Charu Sinha appointed IG CRPF in Srinagar, first female IPS officer to take charge in terrorist-hit sector

ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப் படைக்கு முதல் முறையாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம்

ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப் படைக்கு முதல் முறையாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம்
ஜம்மு மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப்.,படைக்கான ஐ.ஜி.,யாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாருசின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப்.,படைக்கான ஐ.ஜி.,யாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாருசின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது:

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான சாரு சின்ஹா 1996 ம் ஆண்டுக்கான தெலுங்கான மாநில கேடரை சேர்ந்தவராவார். இவர் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.ஆர்.பி.எப்.,படை பிரிவுகளில் ஐ.ஜி., ஆக பணிபுரிந்துள்ளார்.


பீகார் மாநிலத்தில் நக்சல் அதிகம் உள்ள பகுதிகளில் சி.ஆர்.பி.எப்.,படை பிரிவுக்கு ஐ.ஜி.ஆக பதவி ஏற்று நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்பட கையாண்டுள்ளார். மேலும் ஜம்மு பகுதி சி.ஆர்.பி.எப் படை பிரிவுக்கு ஐ.ஜி.,ஆக பதவி வகித்துள்ளார். இருப்பினும் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப் படைக்கு என பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்ரீநகர் துறை பிரிவின் கீழ் ஜம்முகாஷ்மீர் பட்காம், கந்தர்பால் மற்றும் ஸ்ரீநகர் யூனியன் பிரதேசமான லடாக் ஆகிய பகுதிகள் அடங்கி உள்ளன. இத்துறையில் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாரு சின்ஹா தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.