தேசிய செய்திகள்

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Goa Chief Minister Pramod Sawant tests positive for #COVID19. He is asymptomatic and under home isolation.

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பானஜி,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் நான்  வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். வீட்டிலிருந்து எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.