தேசிய செய்திகள்

மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு + "||" + The Lok Sabha session is going on in the evening

மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு

மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு
மக்களவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினமும் மாலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இந்நிலையில்  மக்களவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும்,  செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தினமும் மாலையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் நாளான செப்டம்பர் 14-ல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்று  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.