தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வுத்துறை தகவல் + "||" + Nationwide In August 27 percent extra rain Meteorological Information

நாடு முழுவதும் ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வுத்துறை தகவல்

நாடு முழுவதும் ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வுத்துறை தகவல்
நாடு முழுவதும் ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை மழைக்காலமாக கணக்கிடப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் பெய்யும் மழை அளவை இந்திய வானிலைத்துறை கணக்கிட்டு அறிவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கமான அளவை விட 27 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது கடந்த 44 ஆண்டுகளில் அதிகம் ஆகும். அதேநேரம் கடந்த 120 ஆண்டுகளில் இது 4-வது அதிக மழைப்பொழிவு ஆகும். அந்தவகையில் கடந்த 1926-ம் ஆண்டு 33 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. அடுத்ததாக 1976-ல் 28.4 சதவீதமும், 1973-ல் 27.8 சதவீதமும் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது.

கடந்த மாதம் வங்காள விரிகுடா கடலில் 5 முறை குறைந்த காற்றழுத்தம் உருவானதே இந்த அதிக மழைப்பொழிவுக்கு காரணம் என வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதைப்போல கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31 வரையிலான காலகட்டத்திலும் வழக்கமான அளவை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்திருப்பதாகவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூருவுக்கு 3-வது இடம்
நாட்டிலேயே கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூரு 3-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
2. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.
3. நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது: கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
4. நாடு முழுவதும் மேலும் 90 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், ஆந்திராவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
5. நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே வாரியம் அறிவிப்பு
நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.