தேசிய செய்திகள்

அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது - உச்சநீதிமன்றம் + "||" + Promotion should not be given on the basis of reservation in public service - Supreme Court

அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது - உச்சநீதிமன்றம்

அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது - உச்சநீதிமன்றம்
அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் இருவரது வழக்கில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பணியிடங்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது என்றும் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.