உலக செய்திகள்

விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் + "||" + Iron wire that penetrated throughout the body in the accident Fortunately the woman who survived

விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
கட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
பீஜிங்

சீனாவில் கட்டுமானப்பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒரு பெண்ணின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்தது. கம்பியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த சியாங் என்ற அந்த பெண்ணை, கம்பியை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள் உடன் வேலை செய்தவர்கள்.

அந்த கம்பி சியாங்கின்பின்புறம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்திருந்தாலும், அவரது முக்கிய உள்ளுறுப்புகளோ, முக்கிய இரத்தக்குழாய்களோ பாதிக்கப்படாமலிருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

உடனே அறுவை சிகிச்சை ஒன்றை துவக்கிய மருத்துவர்கள் அந்த கம்பியை அகற்றுவதற்கு மூன்று மணி நேரம் போராடவேண்டியிருந்தது.வெற்றிகரமாக மருத்துவர்கள் அந்த கம்பியை அகற்றிய நிலையில், தற்போது சியாங்கின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அவ்வளவு நீளக் கம்பி உடலுக்குள் நுழைந்தும், அந்த பெண் உயிர் பிழைத்தது உண்மையாகவே அற்புதம்தான்!


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் மிரட்டலை மீறி தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா
சீனாவின் மிரட்டலை மீறி அமெரிக்கா 2.4 பில்லியன் டாலர் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை தைவானுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின்
சீனா மற்றும் ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது, இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
3. 160 பெண்கள் பாலியல் கொடுமை குற்றவாளி சிக்கினான்
இளம் பெண்கள் மீதான தாக்குதல் உட்பட 160 பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இத்தாலிய நபரை ஜெர்மன் எல்லையில் பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
4. சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...!!
சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற பூட்டானுடன் நெருக்காமாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
5. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாகா அதன் ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டம்
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாக சீனாவின் அச்சு ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டமிட்டு உள்ளது.