தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் வழக்கில் திடீர் திருப்பம்: காதலி ரியா வாட்ஸ் அப் உரையாடல் மூலம் போதைப்பொருள் ஆசாமிகள் கைது + "||" + NCB 'breakthrough' in the Rhea Chakraborty drug WhatsApp chats

சுஷாந்த் சிங் வழக்கில் திடீர் திருப்பம்: காதலி ரியா வாட்ஸ் அப் உரையாடல் மூலம் போதைப்பொருள் ஆசாமிகள் கைது

சுஷாந்த் சிங் வழக்கில் திடீர் திருப்பம்: காதலி ரியா வாட்ஸ் அப் உரையாடல் மூலம் போதைப்பொருள் ஆசாமிகள் கைது
சுஷாந்த் சிங் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. காதலி ரியா சக்ரபோர்த்தி வாட்ஸ் அப் உரையாடல் மூலம் போதைப்பொருள் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்திக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளது.

புதன்கிழமை,  அவருக்கு போதை பொருள் ஆசாமிகளுடன் தொடர்பு உள்ளது என்ற ஆதாரங்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. இதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியா எப்போதுமே தான் போதைப்பொருள் உட்கொண்டது இல்லை என மறுத்து வந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்,

போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் அமலாக்க இயக்குநரகத்திலிருந்து அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் தகவல்தொடர்புகளைப் பெற்றது. 

"சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் பணமோசடி வழக்கை விசாரிக்கும் போது, ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோரின் பல வாட்ஸ்அப் அரட்டைகளை அமலாக்கத்துறை  கண்டறிந்தது. இந்த அரட்டைகள் போதைப்பொருள் நுகர்வு, கொள்முதல், பயன்பாடு மற்றும் பரிமாறுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன" என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .

கடந்த புதன்கிழமை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு வழக்கு பதிவு செய்து பூர்வாங்க விசாரணையைத் தொடங்கியது.

மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகஸ்ட் 27 முதல் 28 வரை இடைப்பட்ட இரவில், அப்பாஸ் லக்கானி மற்றும் கர்ன் அரோரா ஆகிய இருவரை கைது செய்தது

அவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையின் போது, அப்பாஸுக்கு பாந்த்ராவில் வசிக்கும் ஷைத் விலாத்ராவுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாட்ஸ் அப் உரையாடல் விவரங்களின் பதிவுகளின் பகுப்பாய்வில்  பாசித் பரிஹார் மற்றும் சூர்யதீப் மல்ஹோத்ரா ஆகியோருடன் ஷைத் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது.

மார்ச் 17 ஆம் தேதி, ரியாவின் சகோதரர் ஷோயிக் ஷைதின் எண்ணை சுஷாந்த் வீட்டுக்காப்பாளர் சாமுவேல் மிராண்டாவுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் ஐந்து கிராம் போதைப்பொருளுக்கு  ரூ .10,000 செலுத்துமாறு கேட்டார்.

பின்னர் மிராண்டா ஷைத்தை தொடர்பு கொண்டார். மிராண்டா அவருடன் பேசுவதற்கு முன்பு பாசித் ஷைத்துடன் பேசினார் என்பதை பகுப்பாய்வு காட்டுகிறது என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு  வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்ற காவல் அக்.20 வரை நீட்டிப்பு
நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் சகோதரர் கைது
சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியாவின் சகோதரரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
3. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 10½ மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 10½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
4. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் இன்றும் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நேற்று நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 10½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.