உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி + "||" + At least 37 Taliban militants killed in Afghanistan

ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட  37 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.
காபூல்

ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு இராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பார்யப் மாகாணத்தில் இன்று போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தலிபானின் மூன்று தளபதிகள் உட்பட மொத்தம் 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு பிராந்தியத்தின் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிப் ரெசாய் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து பார்யப் மாகாணத்தின் கொய்சர்  மற்றும் கவாஜா  மாவட்டங்களில் அதிகாலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதிகளான முல்லா சாதிக், முல்லா பஷீர் மற்றும் பைசுல்லா ஆகியோர் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர், அத்துடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

கொய்சர்  மற்றும் கவாஜா  மாவட்டங்களில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்க திட்டங்களைத் தீட்டுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் கூடியிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிப் ரெசாய் வித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 9 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது
3. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
5. உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்
உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.