தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் + "||" + Video discussion of MK Stalin with Thanjavur and Thiruvarur district administrators
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல்
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
சென்னை,
கொரோனா பரவல் காரணமாக தி.மு.க. கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் நேற்று, தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மற்றும் திருவாரூர் கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர்களிடம் மு.க.ஸ்டாலின் அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்தும், தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.