உலக செய்திகள்

கொரோனா காரணமாக ரஷியாவின் எஸ் -400 அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது -ரஷியாவுக்கான இந்திய தூதர் + "||" + COVID-19 pandemic will not affect deliveries of S-400 to India: Indian Ambassador to Russia

கொரோனா காரணமாக ரஷியாவின் எஸ் -400 அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது -ரஷியாவுக்கான இந்திய தூதர்

கொரோனா காரணமாக ரஷியாவின் எஸ் -400 அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது -ரஷியாவுக்கான இந்திய தூதர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷியாவின் எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது என ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.
குபிங்கா:

நீண்டகால பாதுகாப்புத் தேவைகளுக்காக 2018 அக்டோபர் 5 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற 19 வது இந்தியா-ரஷியா ஆண்டு இருதரப்பு உச்சி மாநாட்டின் போது ஐந்து எஸ் -400 அமைப்புகளை வாங்குவதற்காக இந்தியா 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷியாவின் எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது  என்று ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.

ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா

"எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவது கால அட்டவணையில் இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எஸ் -400 விநியோகத்தை பாதிக்காது.

அடுத்த ஆண்டு ரஷியாவின் கமோவ் கா -226 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளும் என நம்புகிறது.

"கமோவ் 226 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் உற்பத்தியை உள்நாட்டுமயமாக்குவது குறித்து இன்னும் சில தொழில்நுட்ப விவாதங்கள் உள்ளன. இந்த விவாதங்கள் விரைவில் வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே காமோவ் 226 உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.

பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய அமசங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இது எதிர்வரும் இந்தியா-ரஷியா இருதரப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றப்படும்.

இந்திய-ரஷிய இருதரப்பு உச்சிமாநாடு அரசியல், பொருளாதார, வர்த்தகம், எரிசக்தி ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கும். நிச்சயமாக, பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருக்கும்.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய ஆதரவு உட்பட சில மிகப் பெரிய அறிவிப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ரஷ்யா மிகவும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளது, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.
2. கொரோனா தொற்று நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
4. சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைக்கிறது - சீனா சீற்றம்
சீனாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் அமெரிக்கா கருத்து வேறுபாட்டை விதைத்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
5. சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின்
சீனா மற்றும் ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது, இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.