மாநில செய்திகள்

சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 2 inspectors in Chennai police

சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில்தான் உள்ளது. நேற்று 9 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இவர்களில் 2 இன்ஸ்பெக்டர்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,271 ஆக உயர்ந்தது.


தீவிர சிகிச்சை பலனாக நேற்று 10 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இது வரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,865 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் நேற்று குணமடைந்து பணிக்கு திரும்பினார். சென்னை போலீசில் கொரோனா பாதிப்பை விட, குணமானவர்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர்
சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சென்னை போலீசில் புதிய பாதிப்பு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா
சென்னை போலீசில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சென்னை போலீசில் புதிய பாதிப்பு: உதவி கமிஷனர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் புதிய பாதிப்பாக உதவி கமிஷனர் உள்பட 8 பேரை கொரோனா தாக்கியது . மேலும் 32 போலீசார் நலம் அடைந்தனர்.
5. சென்னை போலீசில் கொரோனா பாதித்த சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து பணிக்கு திரும்பினார் - கமிஷனர் நேரில் சென்று வரவேற்றார்
சென்னை போலீசில் முதன் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று அவரை வரவேற்றார்.