மாநில செய்திகள்

சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி + "||" + Attempt to kill by throwing a bomb DMDKVIP in Chennai

சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி

சென்னையில் தேமுதிக பிரமுகரை  வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை

பரங்கிமலை ஒன்றிய தேமுதிக துணை செயலாளரான ராஜசேகருக்கும், அருளுக்கும் கார் விடுவதில் ஜனவரி மாதம் தகராறு நேரிட்டதாகவும், இதில் தாக்கப்பட்ட அருள் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜசேகர் மீது அருள் உள்ளிட்ட 7 பேர் நேற்றிரவு தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் திமுக பிரமுகர் மனோநிதி இருப்பதாக கூறி, அவர் வீடு மீது ராஜசேகரின் ஆதரவாளர்கள் 2 பேர் காரில் வந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.


ராஜேசகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அருள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ், மனோநிதி வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் ராஜேஷ், ஓட்டேரியை சேர்ந்த ரவுடி கார்த்திக்கை தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்காதால் காரணமாக நடந்த கொலைகள் பட்டியலில் சென்னை முதல் இடம் : என்.சி.ஆர்.பி.
கள்ளக்காதலால் ஏற்படும் கொலைகள் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது என தேசிய குற்றப் பதிவு பணியக புள்ளிவிவரம் தெரிவித்து உள்ளது.
2. ‘கொலை முயற்சியின் பின்னணியில் புதின் உள்ளார்’ - ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி பரபரப்பு குற்றச்சாட்டு
கொலை முயற்சியின் பின்னணியில் அதிபர் புதின் உள்ளதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
3. காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது
காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த சமூக வலைதளத்தில்புகைப்படம் வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டார்.
4. கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.
5. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயற்சி ; வாலிபர் கைது
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.