உலக செய்திகள்

கேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்து சீனாவுக்கு பெருத்த அடி கொடுத்த தாய்லாந்து + "||" + Big blow to China as Thailand scraps KRA canal project

கேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்து சீனாவுக்கு பெருத்த அடி கொடுத்த தாய்லாந்து

கேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்து சீனாவுக்கு பெருத்த அடி கொடுத்த தாய்லாந்து
கேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்து சீனாவுக்கு தாய்லாந்து பலத்த அடி கொடுத்து உள்ளது.
தாய்லாந்து

கேஆர்ஏ கால்வாய் திட்டம், சீனாவிற்கு, ராணுவ ரீதியாகவும் மூலோபாய ரீதியிலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாம். இதன் மூலம், சீனக் கடற்படை தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் புதிதாக கட்டப்பட்ட தளங்களுக்கு இடையில் மலாக்கா ஜலசந்திக்கு ஒரு நேரிடையாக செல்லும் புறவழிச்சாலையை கட்ட திட்டமிட்டிருந்தது.


இந்நிலையில், தாய்லாந்து வியாழக்கிழமை சீனாவின் கேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்வதாக  அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மலாக்கா ஜலசந்திக்கு ஒரு நேரிடையாக செல்லும் புறவழிச்சாலையை கட்ட திட்டமிட்டிருந்தது.

சீனா திட்டமிட்டுள்ள  120 கிலோமீட்டர் மெகா கால்வாய் திட்டத்தினால், தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் சுதந்திரம் பாதிக்கப்படும், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என தாய்லாந்து எதிர் கட்சியான பியூ தாய் கட்சி மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த திட்டத்தை தாய்லாந்து ரத்து செய்தது.

மேலும், சீனாவிடமிருந்து 724 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு யுவான்-க்ளாஸ் S26T  நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதையும் தாய்லாந்து ஒத்தி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கடினமான பிரிவில் சாய்னா நேவால்
10 மாதங்களுக்கு பிறகு களம் காண காத்திருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.
2. தாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த அரசு
தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளது.
3. தாய்லாந்தில் அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
தாய்லாந்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.