உலக செய்திகள்

ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார் + "||" + Defence Minister Rajnath Singh departs from Moscow to Tehran, the Capital of Iran.

ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்

ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.
மாஸ்கோ,

இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார். பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை மந்திரியை ராஜ்நாத்சிங் சந்தித்தார். லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இரு நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகளுடன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் அமீர் ஹடமீயை ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தசரா பண்டிகையையொட்டி ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23-24 தேதிகளில் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. கலாம் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார் - ராஜ்நாத் சிங் புகழாரம்: மக்கள் ஜனாதிபதியாக நினைவில் நிற்கிறார் என ஜே.பி. நட்டா பெருமிதம்
மக்கள் ஜனாதிபதி கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,என அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
3. எந்த விவசாயியும் ஒரு டிராக்டர் எரிக்க அனுமதிக்க மாட்டார்: அரசியல் லாபத்திற்காக எரிக்கப்படுகின்றன - ராஜ்நாத் சிங்
எந்த விவசாயியும் ஒரு டிராக்டர் எரிக்க அனுமதிக்க மாட்டார் என்று அரசியல் லாபத்திற்காக எரிக்கப்படுகின்றன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
4. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ராஜ்நாத் சிங்
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
5. ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்
ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.