தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண் + "||" + Pranab Mukherjee's lucky number 13

பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண்

பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது.
புதுடெல்லி,

பொதுவாக, 13-ம் எண், கெட்ட எண்ணாக கருதப்படுகிறது. ஆனால், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது. எண் கணிதத்துக்கே சவால் விடும் இந்த தகவலை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்தார்.


பிரணாப் முகர்ஜி, முதன் முதலில் 1969-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி, மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். டெல்லியில் தல்கடோரா சாலையில் 13-ம் எண் முகவரி கொண்ட வீட்டில்தான் அவர் 10 ஆண்டுகள் குடியிருந்தார். அப்போதுதான், அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை தொட்டது.

பிரணாப் முகர்ஜியின் திருமண தேதி ஜூலை 13 ஆகும். அவர் நாட்டின் 13-வது ஜனாதிபதி ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்காளதேசத்தில் துக்கம் அனுசரிப்பு - டிரம்ப், ராஜபக்சே இரங்கல்
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்காளதேசத்தில் நேற்று துக்கம் அனுசரிக்கப்பட்டது. டிரம்ப், ராஜபக்சே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
2. பிரணாப் முகர்ஜி மறைவு: அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
3. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
4. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.
5. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனை
பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது