மாநில செய்திகள்

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Special trains between Chennai-Delhi and Trichy-Howrah from December 12 - Southern Railway

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில்வே வாரியம் அனுமதி அளித்ததையடுத்து கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்- டெல்லி (வண்டி எண்: 02615) இடையே தினசரி இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 6.30 மணிக்கு டெல்லி சென்றடையும். மறுமார்க்கமாக டெல்லி- எம்.ஜி.ஆர். சென்டிரல் (02616) இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் டெல்லியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 6.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.


* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்- ஷாப்ரா (02669) இடையே திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஷாப்ரா- எம்.ஜி.ஆர். சென்டிரல் (02670) இடையே திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஷாப்ரா ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும்.

* திருச்சி- ஹவுரா (02664) இடையே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஹவுரா- திருச்சி (02663) இடையே வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஹவுராவில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2. டெல்லியில் பனிபோல் படர்ந்த புகை - பொதுமக்கள் அவதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு காற்று மாசு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
3. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
4. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை நிரப்பி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
5. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.