தேசிய செய்திகள்

5 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறக்கும் தேதி அறிவிப்பு + "||" + Announcement of the opening date of the Taj Mahal after 5 months

5 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறக்கும் தேதி அறிவிப்பு

5 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறக்கும் தேதி அறிவிப்பு
5 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறக்கும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆக்ரா,

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் திறக்கப்படாததால் சுற்றுலாத்துறைக்கு பெரும் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது தாஜ்மஹால் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்ர் 21 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

தாஜ்மஹாலில் தினமும் 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மஹால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும் என்றும் தாஜ்மஹால் செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.