தேசிய செய்திகள்

கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவரது வக்கீல் தகவல் + "||" + Kangana Ranaut's lawyer informed that no illegal construction work was carried out on the house

கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவரது வக்கீல் தகவல்

கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவரது வக்கீல் தகவல்
கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.


இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மராட்டியத்தில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என கங்கனா ரணாவத் நேற்று முன்தினம் அச்சம் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர்.

கங்கணா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் மாநகராட்சியின் நோட்டீசுக்கு நடிகை கங்கனா ரணாவத் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் வக்கீல் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார். எனவே கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு மும்பை மாநகராட்சி வழங்கியுள்ள நோட்டீஸ் சரியானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கங்கனா ரணாவத்தை அச்சுறுத்துவதற்காக மட்டுமே நோட்டீஸ் வழங்கியிருப்பதாக தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கங்கனா ரணாவத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு
தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கில் கங்கனா ரணாவத்தைகைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
3. மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி
மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என சோனியா காந்திக்கு நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகை கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம் ‘உங்கள் ஆணவம் நொறுங்கும்’
உங்கள் ஆணவம் நொறுங்கும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ஆவேசமாக தெரிவித்தார்.