மாநில செய்திகள்

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ + "||" + Opening of theaters: The decision will be taken as per the guidelines of the Central Government - Minister Kadampur Raju

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசு வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியே திரையரங்குகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழிபாட்டுத் தலங்களை போன்று, திரையரங்குகளை திறக்க அனுமதிக்க முடியாது என்றும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியே திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் கூறினார்.


க்யூப் மூலம் படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், க்யூப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை அரசு குறைத்து உத்தரவிட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம், கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.