சினிமா செய்திகள்

வடிவேல் பாலாஜி மறைவுக்கு கார்த்தி, தனுஷ் இரங்கல் + "||" + Karthi, Dhanush mourn Vadivelu Balaji's death

வடிவேல் பாலாஜி மறைவுக்கு கார்த்தி, தனுஷ் இரங்கல்

வடிவேல் பாலாஜி மறைவுக்கு கார்த்தி, தனுஷ் இரங்கல்
வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவுத்துள்ளனர்.
சென்னை,

நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது கை, கால்களும் செயல் இழந்தன. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார். நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நல்ல திறமையாளரான வடிவேல் பாலாஜியின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை அளித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

வடிவேல் பாலாஜியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் நிலையில் அவரது உடலுக்கு ரோபோ சங்கர், ராமர் உள்பட அவருடன் பணிபுரிந்த நகைச்சுவை கலைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல்
ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
2. அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3. எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
5. எச்.வசந்தகுமார் எம்.பி. மறைவு: நாகர்கோவில், கருங்கலில் மவுன ஊர்வலம் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
எச்.வசந்தகுமார் எம்.பி. மறைவையொட்டி நாகர்கோவில் மற்றும் கருங்கலில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.