மாநில செய்திகள்

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை + "||" + Jyoti Durga commits suicide in Madurai feraing NEET exam

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை,

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் நாளை(செப்.13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது விரைவில் சோதனை ஓட்டம்
மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
2. மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்
மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3. மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
4. மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
தமிழகத்தில் மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை. எனினும் இதுபற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
5. மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.