தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி பதவிகளில் மாற்றம்: பதவி இழந்த குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா + "||" + Major reshuffle in Congress: Ghulam Nabi Azad gets the axe, Randeep Surjewala biggest gainer

காங்கிரஸ் கட்சி பதவிகளில் மாற்றம்: பதவி இழந்த குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சி பதவிகளில் மாற்றம்: பதவி இழந்த குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா
காங்கிரஸ் கட்சி பதவிகள் மாற்றப்பட்டத்தில் பதவி இழந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்; பதவி பெற்ற ரன்தீப் சுர்ஜேவாலா
புதுடெல்லி

அண்மையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கடசியின் பெரிய மறுசீரமைப்பில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரியானாவின் பொறுப்பில் இருந்த குலாம் நபி ஆசாத்துக்கு பதில்  விவேக் பன்சால் மாற்றப்பட்டுள்ளார்.

மறுசீரமைப்பிலிருந்து மிகப்பெரிய லாபம் ஈட்டியவர் ராகுல் காந்தி விசுவாசி ரன்தீப் சுர்ஜேவாலா  ஆவார். இவர் காங்கிரஸ் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் உயர் சக்தி கொண்ட ஆறு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்று உள்ளார்.

சோனியா காந்திக்கு எழுதிய சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்ட ஜிதின் பிரசாத் பதவி உயர்வு பெற்றுள்ளார். மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பொறுப்பாளராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி வதேரா தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராகவும், ராகுல் காந்தி விசுவாசி மாணிக்கம் தாகூர் தெலுங்கானாவின் புதிய செயலாளராகவும் இருப்பார்கள்.

குலாம் நபி ஆசாத் தவிர, அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் பொதுச் செயலாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நிறுவன விஷயங்களில் சோனியா காந்திக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் அம்பிகா சோனி இடம்பெற்று உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி
பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என சோனியாகாந்தி தாக்கி உள்ளார்.
2. பா.ஜனதா அரசை வெற்றிபெற விடக்கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
பா.ஜனதா அரசு தனது ஜனநாயக விரோத செயல்களில் வெற்றிபெற விடக்கூடாது என்று காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
3. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார்- சோனியா காந்தி
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் என சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
4. கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு கட்சி எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.
5. 2024 இல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரசை வழிநடத்த முடியாது -கடிதம் எழுதியவர்களில் ஒருவர்
ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியாது என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறி உள்ளார்.