வெறுக்கத்தக்க பேச்சு புகார்கள்: பேஸ்புக் உயர் அதிகாரிக்கு டெல்லி குழு சம்மன் + "||" + Top Facebook Official Summoned By Delhi Panel Over Hate Speech Complaints
வெறுக்கத்தக்க பேச்சு புகார்கள்: பேஸ்புக் உயர் அதிகாரிக்கு டெல்லி குழு சம்மன்
வெறுக்கத்தக்க பேச்சு புகார்கள் தொடர்பாக பேஸ்புக் உயர் அதிகாரிக்கு டெல்லி குழு சம்மன் அனுப்பி உள்ளது
புதுடெல்லி
வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் சமூக ஊடக தளத்தில் வேலை பார்க்கும் ஒருசிலர் வேண்டுமென்றே கடைபிடிப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்கள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ராகவ் சாதா தலைமையிலான டெல்லி சட்டமன்ற குழு ஒரு பேஸ்புக் உயர் அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
பேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) இந்த குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், சமூக ஊடக துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்ட காங்கிரசின் சஷி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவால் வெறுக்கத்தக்க பேச்சு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேஸ்புக் இந்திய நிர்வாக இயக்குனர் அஜித் மோகனிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது குறிப்பிட தக்கது.