தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + 2,885 new Covid-19 infections in kerala state, 2,640 through contact

கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 2,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,140 ஆகும். இன்றைக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 42 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 137 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 2,640 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 287 பேருக்கு எதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கொரோனா பாதிப்புக்கு இன்று 15 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,944 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 75,848 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 28,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு
3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
2. கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு நெருக்கடி- எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு தகவல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
3. கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.
4. கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்வு
கேரளாவில் இன்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது