தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு - ஜெயராம் ரமேஷ் + "||" + Parliament's Monsoon Session: Opposition to oppose four legislations that 'take away rights of states', says Jairam Ramesh

நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு - ஜெயராம் ரமேஷ்

நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு - ஜெயராம் ரமேஷ்
நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14ம் தேதி முதல், அக்டோபர் 1ம் தேதி வரை, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை மாற்ற கொண்டு வரப்படும் 11 மசோதாக்கள் உட்பட, 23 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் வழியாக காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில்,

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக 11 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதில், வங்கி சீர்திருத்த சட்ட மசோதா மற்றும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

எங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகும் எதிர்கட்சிகளோடு ஆலோசித்து, ஒருங்கிணைந்து எதிர்ப்போம். கொரோனா விவகாரம், லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல், பொருளாதார வீழ்ச்சி, விமான நிலையங்கள் தனியார் மயம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது குறித்து மக்களவை, மாநிலங்களவை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறோம். எங்களது கேள்விகளுக்கு பிரதமர் மோடி இரு அவைகளிலும் பதிலளிக்க வேண்டும். அவர் நாடாளுமன்றத்திற்கு வராவிட்டால், அவரை வர சொல்லி வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.