தேசிய செய்திகள்

கங்கனாவை ஆதரிப்பது துரதிஷ்டவசமானது - பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல் + "||" + Shiv Sena MP Sanjay Raut slams BJP, says unfortunate the party backing those who likened Mumbai to PoK

கங்கனாவை ஆதரிப்பது துரதிஷ்டவசமானது - பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்

கங்கனாவை ஆதரிப்பது துரதிஷ்டவசமானது - பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு பா.ஜ.க ஆதரவளிப்பது துரதிஷ்டவசமானது என சிவசேனா கூறியிருக்கிறது.
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதையடுத்து அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது. இதனால் மோதல் மேலும் முற்றியது.

இந்த நிலையில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு பா.ஜ.க  ஆதரவளிப்பது துரதிஷ்டவசமானது என சிவசேனா கூறியிருக்கிறது. சிவசேனா கட்சி பத்திரிகையில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் கங்கனாவுக்கு ஆதரவளிப்பது மற்றும் சுஷாந்த் சிங் வழக்கில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டினால், பா.ஜ.க பீகார் தேர்தலில் வெற்றிபெற உயர் வகுப்பினரை குறிவைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தி திரையுலக கலைஞர்கள் ‘திறமையால் வெற்றி பெற்றுள்ளனர், மதத்தால் அல்ல’ சிவசேனா கருத்து
இந்தி திரையுலக கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர், மதத்தால் அல்ல என சிவசேனா கூறியுள்ளது.
2. "மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" - கங்கனா ரனாவத் சவால்
9 ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" என்று கங்கனா ரனாவத் சவால் விடுத்து உள்ளார்.
3. மும்பையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; 15 நாட்களில் 20 சதவீதம் அதிகரிப்பு
மும்பையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது பதினைந்து நாட்களில் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
4. மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று காலை லேசான நிலநடுக்கம்
மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்குப் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. விநாயகர் சிலைகளை கரைக்க மும்பையில் வீடு தேடி வரும் செயற்கை குளம் - மாநகராட்சி தகவல்
மும்பையில் விநாயகர் சிலைகளை கரைக்க பொதுமக்களின் வீடு தேடி வரும் நடமாடும் செயற்கை குளம் குறித்து மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.