தேசிய செய்திகள்

ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து; புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டி + "||" + If Rahul Gandhi is the PM will cancel NEET; Puducherry CM Narayanasamy

ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து; புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டி

ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து; புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டியில் கூறியுள்ளார்.
புதுச்சேரி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை இன்று நடத்தியது.  திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

நீட் தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதினார்கள். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர்.

நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழகத்தில் ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு, தமிழகத்தில் மாணவர்களில் சிலர் அதனை எதிர்கொள்வதற்கு பதிலாக தங்களது உயிரை துறக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு நடத்துவது பற்றி புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ராகுல் காந்தி பிரதமரானால், நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் கூறியுள்ளார்.
2. “நான் பெரிய அழகி இல்லை”; நடிகை சமந்தா
நான் பெரிய அழகி இல்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
3. போதையின் அடிமை ரியா; கங்கனா ரணாவத்
போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று ரியாவை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
4. மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்; அக்‌ஷய்குமார்
மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன் என நடிகர் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.
5. விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வாலுக்கு நடிகையுடன் காதல்?
விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வால் தனது காதல் பற்றி கூறியுள்ளார்.