தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் + "||" + Covid-19 vaccine possible by 2021 first quarter, says Harsh Vardhan

அடுத்த ஆண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

அடுத்த ஆண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி,

வரும் 2021-ம் ஆண்டு முதல் காலாண்டில்  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்  தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:- “ கொரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தேதி நிர்ணயிக்கப்படவில்லை. 2021 முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியம் உள்ளது.  தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, உற்பத்தி காலம் உள்ளிட்டவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகளவு இருக்கக் கூடிய அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்காக தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்படுவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஒருமித்த முடிவு எட்டிய பிறகே, இது நடைமுறைப்படுத்தப்படும். தடுப்பூசி மீது யாருக்கேனும் நம்பிக்கையின்மை இருந்தால், முதல் நபராக நானே மகிழ்ச்சியுடன் செலுத்திக்கொள்வேன். 

பரிசோதனையில் மட்டுமே தடுப்பு மருந்துகள் இருப்பதால், அவற்றின் விலை பற்றி தற்போதே கூறுவது முதிர்ச்சியற்றதாக இருக்கும். எனினும்,  விலையை பொருட்படுத்தாமல் தடுப்பூசி யாருக்கு தேவைப்படுமோ அவர்களுக்கு  நிச்சயம் கிடைக்க  அரசுவகை செய்யும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.
2. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
3. இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.
4. உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது.
5. அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.