உலக செய்திகள்

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது-சீனா குற்றச்சாட்டு + "||" + China-US relations: Beijing slams Pentagon report, blames Taipei for stirring up regional tensions

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது-சீனா குற்றச்சாட்டு

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது-சீனா குற்றச்சாட்டு
உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.
பீஜிங், 

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் படிப்படியாக வளர்ந்து தற்போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் சீன ராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக சீனா ராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு கியான் கூறுகையில் “பிராந்திய அமைதியின்மையை தூண்டுவது, சர்வதேச ஒழுங்கை மீறுவது, உலக அமைதியை அழிப்பது அமெரிக்கா தான் என்பதை பல ஆண்டு சான்றுகள் காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 

தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக அமெரிக்கா சீனாவின் இயல்பான பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டுமானம் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அமெரிக்கா அதனை நிறுத்தி விட்டு இருதரப்பு ராணுவ உறவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை
ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. எல்லையில் ஏப்ரல் மாத சூழலை திரும்ப கொண்டு வர வேண்டும்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
எல்லையில் பழைய சூழலை திரும்பக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
3. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை:சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தள்ளுபடி செய்ய அமெரிக்க கோரிக்கை
பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை கேட்டுக்கொண்டனர்.
4. எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லையா? மத்திய மந்திரி கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்திய-சீன எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி கூறியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.