தேசிய செய்திகள்

ஒடிசாவிலும் சோகம்: ‘நீட்’ அச்சத்தால் மாணவி தற்கொலை + "||" + Tragedy in Odisha too: Student commits suicide due to fear of ‘need’

ஒடிசாவிலும் சோகம்: ‘நீட்’ அச்சத்தால் மாணவி தற்கொலை

ஒடிசாவிலும் சோகம்: ‘நீட்’ அச்சத்தால் மாணவி தற்கொலை
ஒடிசாவிலும் ‘நீட்’ அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு நடந்துள்ளது.
பரிபடா,

‘நீட்’ தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைப்போல ஒடிசாவிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட பரிபடா பகுதியை சேர்ந்தவர் உபசனா சாகு (வயது 18). இவர் நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பரிபடா நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவி உபசனா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.