உலக செய்திகள்

செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வி- சுற்றுவட்ட பாதையை அடைய தவறியது + "||" + China's Remote-Sensing Optical Satellite Fails To Reach Orbit: State Media

செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வி- சுற்றுவட்ட பாதையை அடைய தவறியது

செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வி- சுற்றுவட்ட பாதையை அடைய தவறியது
தோல்விக்கான சரியான காரணம் குறித்து அறிய விசாரணை நடந்து வருவதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
பீஜிங், 

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. ‘

சிலிங்1’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘குவைசு1ஏ’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சுற்றுவட்ட பாதையை அடைய தவறிவிட்டது. இதன் மூலம் சீனாவின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது.

முறையற்ற செயல் திறன் காரணமாக இந்த பணி தோல்வியடைந்ததாக ஜிகுவான் ஏவுதள மையம் தெரிவித்ததாகவும், எனினும் தோல்விக்கான சரியான காரணம் குறித்து அறிய விசாரணை நடந்து வருவதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லையா? மத்திய மந்திரி கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்திய-சீன எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி கூறியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
2. கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா
கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது.
3. சீனாவின் 3 கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.
5. டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சி தோல்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த தோல்வி டிக்-டாக் செயலியை ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றுவதற்கு வழிவகுத்துள்ளது.