உலக செய்திகள்

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் ! + "||" + Scientists Publish Images Of Coronavirus Infecting Respiratory Cells

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் !

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட  ஆராய்ச்சியாளர்கள் !
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், மனிதனின் சுவாச செல்களை எந்த அளவுக்கு தாக்குகிறது என்பது தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன.

அகில உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ், எவ்வித தடையுமின்றி எல்லைகளை கடந்து பரவி வருகிறது.  இந்த வைரஸ் தொற்று, மனிதர்களின் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்சினையை உருவாக்குகிறது.

இந்த நிலையில்,  ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட சுவாசக் குழாய் செல்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எந்த அளவிற்கு கொரோனா சுவாச குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. நுரையீரலுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை விளக்கும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த படங்கள் மனித சுவாச மேற்பரப்பில் ஏராளமான வைரஸ் துகள்களைக் காட்டுகின்றன. திசுக்களில் தொற்றுநோயை பரப்பத் தயாராக உள்ளன. அதுமட்டுமின்றி பிற நபர்களுக்கும் பரப்ப தயார் நிலையில் உள்ளன.கொரோனா வைரஸை நுரையீரலின் எபிடெலியல் செல்களில் செலுத்தினர், பின்னர் அவர்கள் 96 மணி நேரம் கழித்து உயர் ஆற்றல் கொண்ட ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில் தான் இப்படியான படம் கிடைத்துளளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த படங்கள் வண்ணமயமாக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
2. கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141- ஆக உயர்ந்துள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது: 4 மாவட்டங்களில் மட்டும் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது. நேற்று 4 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.