தேசிய செய்திகள்

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - பிரதமர் மோடி பேட்டி + "||" + Vaccine to be used soon to prevent corona infection - PM Modi interview

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - பிரதமர் மோடி பேட்டி

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - பிரதமர் மோடி பேட்டி
கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும். 

முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
2. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.
3. தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது: பிரதமர் மோடி
தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி
விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் அவை நெருக்கடியை எதிர்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்
கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.