தேசிய செய்திகள்

இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது - மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா + "||" + Hindi unites the country Union Home Minister Amit Shah

இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது - மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா

இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது - மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா
இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா வெளியிட்டுள்ளா வீடியோவில் கூறியிருப்பதாவது:-

இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. நம் நாட்டில் சுதந்திர போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்ததாக பயன்பட்டு வருகிறது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேறு எந்த மொழிகளுடனும் இந்தி போட்டியிடவில்லை. மொழி மற்றும் புவியியல் எல்லைக்கோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையில் ஒரு அடையாளம் ஆகும். மொழி, கலாச்சாரம் என இந்திய நாடு வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது.

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா...?
கனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா என்ன என்பது தெரியவந்துள்ளது.
2. கர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம் டி-சர்ட் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டார், நடிகர் சேத்தன்
கர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு இந்தி தெரியாது, நாங்கள் கன்னடர்கள் என்று வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து புகைப்படத்தை நடிகர் சேத்தன் வெளியிட்டுள்ளார்.
3. இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட இணையவழி யோகா பயிற்சி: மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
இந்தியில் மட்டுமே இணையவழி யோகா பயிற்சியை நடத்திய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
4. “இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?” - கனிமொழியை இந்தியரா என்று கேட்ட விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி
இந்தி தெரியாது என்று சொன்னதால் கனிமொழி எம்.பி.யிடம், ‘நீங்கள் இந்தியரா?’ என்று மத்திய பாதுகாப்பு படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
5. இந்திக்கு போகும் சூர்யா படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.