சினிமா செய்திகள்

காட்டுத்தீயால் குடும்பத்துடன் தான் படும் அவஸ்தை பிரபல இந்திய நடிகை வேதனை + "||" + In the coastal city of Newport on the Oregon coast this weekend to get away from the smoky air-RICHA GANGOPADHYAY

காட்டுத்தீயால் குடும்பத்துடன் தான் படும் அவஸ்தை பிரபல இந்திய நடிகை வேதனை

காட்டுத்தீயால் குடும்பத்துடன் தான் படும் அவஸ்தை பிரபல இந்திய நடிகை வேதனை
அமெரிக்காவில் கணவருடன் வசிக்கும் பிரபல நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் காட்டுத்தீயால் குடும்பத்துடன் தான் படும் அவஸ்தை குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா

அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். லீடர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின்னர் தமிழில் தனுஷ் ஜோடியாக மயக்கம் மற்றும் சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார். பின்னர் வாய்ப்பு குறையவே அமெரிக்காவுக்கே திரும்பி விட்டார்.

அங்கு தன் கல்லூரி நண்பர் ஜோ லங்கீலா என்ற வெளிநாட்டு மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. 

அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது. அதனால் மூச்சு விடவும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனால் போர்ட்லேண்ட் மேயர் அவசர நிலையை பிரகடன படுத்தியிருக்கிறார்.<நடிகை ரிச்சா இதன் காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறார்.

இது குறித்து டுவிட்டரில் ரிச்சா கூறி இருப்பதாவது: காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன.

நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.