தேசிய செய்திகள்

மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை + "||" + Prime Minister Modi in Rajya Sabha on the election of Harivansh as Rajya Sabha Deputy Chairman

மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை

மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை
மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கிரிக்கெட் போட்டியில் நடுவர்தான் முக்கியமானவர் அதுபோல் இங்கு சபாநாயகருக்கு முக்கியப் பொறுப்புள்ளது. ஹரிவன்ஸ் தனது பொறுப்புகளை 2 ஆண்டுகள் சிறப்பாக செய்தார். கூட்டத்தொடரை திறம்பட நடத்தினார்.


நாடாளுமன்ற கூட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சம். அதுபோல் இந்த கூட்டத்தொடரின் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானது. நம் திறமையை ஒன்றிணைத்து கடமையை சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒட்டுமொத்த அவையும் நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது - பிரதமர் மோடி உரை
ஒட்டுமொத்த நாடாளுமன்ற அவையும், ஒரு மனதாக, நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. ‘மன் கி பாத்’: இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி‘மன் கி பாத்’என்னும் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.
3. பிரதமர் மோடி ஆற்றிய உரை வெற்று பக்கம்; நிர்மலா சீதாராமன் நிரப்புவார் - ப.சிதம்பரம்
பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை வெற்று பக்கம் அதை நிர்மலா சீதாராமன் நிரப்புவார் என ப.சிதம்பரம் கூறினார்.
4. பிரதமர் மோடி உரையில் ஏழைகள் பிரச்சினைகளுக்கு வழிகாணப்படவில்லை - சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தாக்கு
பிரதமர் மோடி உரையில் ஏழைகள் பிரச்சினைகளுக்கு வழிகாணப்படவில்லை என சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.