தேசிய செய்திகள்

மக்களவையில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் தாக்கல் + "||" + farmers are against 3 agri Bills to be tabled in Parliament

மக்களவையில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் தாக்கல்

மக்களவையில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் தாக்கல்
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
புதுடெல்லி,

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம்18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


இந்நிலையில், கடந்த 2020 ஜூன் 5-ம் பிரகடனம் செய்யப்பட்ட அவசர சட்டத்தை மாற்ற மக்களவையில் இன்று 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

* விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020

* விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா,    2020

* அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, 2020

முதல் இரண்டு மசோதாக்களை, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி ராவ்சாகிப் பாட்டீல் தான்வே தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய சபாநாயகரிடம் அனுமதி கோரிய மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாவின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விவசாயப் பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்றும், விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றார்.