டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், எனக்கு கொரோனா பரிசோதனை இன்று நடத்தப்பட்டது, அதில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
இப்போது காய்ச்சல் அல்லது வேறு எந்த பிரச்சனையும் இல்லை, நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். உங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்று, நான் மீண்டும் பணிக்கு திரும்புவேன்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணியை தடை செய்யாமல், அதற்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.