தேசிய செய்திகள்

மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் + "||" + West Bengal reports 3,211 new #COVID19 cases and 58 deaths today, taking total cases to 2,05,919 including 1,78,223 discharges, 23,693 active cases and 4,003 deaths: State Health Department

மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்

மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
மேற்கு வங்காளத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், இன்று தொற்று பாதிப்பால் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.  மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 05 ஆயிரத்து 919- ஆக உள்ளது. 

தொற்றில் இருந்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 223 பேர் குணம் அடைந்த நிலையில், 23 ஆயிரத்து 693 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மேற்கு வங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில்  இன்று மட்டும் 1,730-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் அம்மாநிலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 04 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. 

 தொற்றில் இருந்து 86 ஆயிரத்து 162 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 16 ஆயிரத்து 726 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பால்  இதுவரை 1,250-பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2. நாடு முழுவதும் கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூருவுக்கு 3-வது இடம்
நாட்டிலேயே கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூரு 3-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
3. குப்புறப்படுத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறப்படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
4. 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
சட்டசபை நாளை கூடுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாதிப்பு இல்லை.
5. மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.