தேசிய செய்திகள்

மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா + "||" + Corona for 41 people at the Governor’s House in Meghalaya

மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா

மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா
மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஷில்லாங்,

மேகாலயா மாநில கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கவர்னர் சத்யபால் மாலிக் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் கவர்னர் உள்பட மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மேலும் 11 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மேகாலயா கவர்னர் மாளிகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது. கவர்னர் சத்யாபால் மாலிக்கிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது
புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.
2. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.
3. புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் உள்ள திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.