உலக செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா? + "||" + Rattled China spying on 10,000 Indian citizens including President, PM Modi: Report

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.
பெய்ஜிங்,

இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடனும் சீனா வரிந்து கட்டி நிற்கிறது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை வலுத்ததால், உளவு பார்க்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனாவுக்குச் சொந்தமான செல்போன் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சீனா உளவு பார்ப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் படி,  சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஷென்ஹூவா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சீன அரசுக்காக இந்தியா உட்பட பல நாடுகள் தொடர்பான தகவல்களை அளித்து வருகிறது எனவும்  இந்தியாவைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் திரட்டியதும் தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட நபரின் நெருங்கிய உறவினர்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாது, உயர் அதிகாரிகள், நீதிபதிகள், விளையாட்டு பிரபலங்கள், தொழில் அதிபர்கள்  ஆகியோரையும் சீன உளவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றுடன் இணைந்து  ஷென்ஹூவா தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.   இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் தகவல் போரை சீனா நடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..!
2. கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி திறன்: அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் -சீனா பெருமை
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான ஆண்டு உற்பத்தி திறன் அடுத்த ஆண்டு 100 கோடி அளவுகளில் முதலிடம் பெறும் என்று சீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
3. உய்குர் இன மக்களை, சீன மயமாக்க ரகசிய முகாம் மற்றும் சிறைகளை அமைத்துள்ளது- தகவல்கள்
உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அதிகமாக முகாம் மற்றும் சிறைகளை சீனா ரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது.
4. சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு
சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன
5. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.