மாநில செய்திகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி மரியாதை + "||" + 112th birthday of the late former Chief Minister Anna Chief Minister Palanisamy Respect

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை,

காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.