கிரிக்கெட்

பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை + "||" + Mohammed Shami's wife Hasin Jahan files petition against Police negligence

பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை

பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை
பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்... வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
கொல்கத்தா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி, சமூகவலைத்தளங்களில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதால், உரிய பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், இவர் சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்

அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இதனால், அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று புகார் அளித்தார். ஆனால் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காத காரணத்தினால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

தன் மனுவில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாவேன்.எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று கோரியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை எனக் கூறி விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனி
அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை என தோனி கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
2. இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது -ஸ்ரீகாந்த்
தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.
3. இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா...? முத்தையா முரளிதரன் வேதனை
ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க முயலுகிறார்கள். 800 திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என முத்தையா முரளிதரன் கூறி உள்ளார்.
4. சென்னைக்கு எதிரான போட்டி: ஒரே பந்தில் இரண்டு முறையில் ஆட்டமிழந்த ரஷித்கான்; டுவிட்டரில் விவாதம்
சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹைதராபாத் வீரர் ரஷீத் கான், ஒரே பந்தில் ஹிட் விக்கெட் மற்றும் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அதுகுறித்து டுவிட்டரில் விவாதம் கிளம்பியுள்ளது.
5. தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவர் கைது
மோசமான ஆட்டம் காரணமாக தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததற்காக 12ம் வகுப்பு மாணவர் ஒரு கைது செய்யப்பட்ட்டு உள்ளார்.